மாவட்ட செய்திகள்

மதுரை மத்திய சிறையில் 15 ஆயுள்தண்டனை கைதிகள் விடுதலை + "||" + 15 sentenced prisoners in Madurai Central Jail

மதுரை மத்திய சிறையில் 15 ஆயுள்தண்டனை கைதிகள் விடுதலை

மதுரை மத்திய சிறையில் 15 ஆயுள்தண்டனை கைதிகள் விடுதலை
மதுரை மத்திய சிறையில் இருந்த 15 ஆயுள்தண்டனை கைதிகள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

மதுரை,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை மத்திய சிறையில் இருந்த 15 ஆயுள்தண்டனை கைதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். சிறைத்துறை அதிகாரி மற்றும் நன்னடத்தை அதிகாரிகளின் ஒப்புதலுடன் இந்த 15 பேருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு நன்னடத்தை விதியின் கீழ் விடுவிக்கப்பட்டு உள்ளனர். விடுவிக்கப்பட்ட கைதிகள் அனைவரும மன மகிழ்ச்சியுடன் நேற்று காலை மதுரை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தனர். அவர்களை அவர்களது குடும்பத்தினர் உற்சாகமாக வரவேற்று அழைத்து சென்றனர். ஏற்கனவே மதுரை மத்திய சிறையில் இருந்த 17 ஆயுள் தண்டனை கைதிகள் 2–ம் கட்டமாக விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது 3–வது கட்டமாக 15 பேர் விடுதலை செய்யப்பட்டுஉள்ளனர்.

விடுவிக்கப்பட்ட 15 பேரில் 2 பேர் குடும்பத்தினரால் ஒதுக்கிவைக்கப்பட்ட காரணத்தினால் அவர்கள் இருவரையும் இந்திய சிறைப்பணி என்ற அமைப்பை சேர்ந்த தொண்டு நிறுவனத்தினர் அழைத்து சென்றனர்.