மாவட்ட செய்திகள்

ஆடி அமாவாசையையொட்டி காவிரி கரையோர பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் + "||" + Adi Dravida Maidan of the Kaveri coast

ஆடி அமாவாசையையொட்டி காவிரி கரையோர பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசையையொட்டி காவிரி கரையோர பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி அமாவாசையையொட்டி காவிரி கரையோர பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யப்பட்டது.
குளித்தலை,

அமாவாசை தினங்களில் தாய், தந்தையை இழந்தவர்கள் அவர்களின் வீடுகளில் விரதம் இருந்து தாய், தந்தை மற்றும் முன்னோர்களை வழிபடுவது வழக்கம். இதில் தை, மகாளய மற்றும் ஆடி அமாவாசைகளில் நதிக்கரைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். காசிக்கும், கங்கைக்கும் அடுத்தபடியாக தமிழகத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் இந்துக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை மிகவும் புண்ணியமாக கருதுகின்றனர்.


இந்த நிலையில் ஆடி அமாவாசையான நேற்று அதிகாலை முதலே குளித்தலை மற்றும் இதை சுற்றியுள்ள பல்வேறு ஊர்களில் இருந்து திரளானோர் குளித்தலை கடம்பந்துறைக்கு வந்திருந்தனர். அங்கு காவிரி கரையோரம் ஆங்காங்கே அமர்ந்து தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும், தங்களுக்கு எல்லா நன்மைகளையும் அவர்கள் செய்யவேண்டும் என்று வேண்டி தங்களது முன்னோர்களுக்கு பிண்டங்கள் வைத்து தர்ப்பணம் செய்தனர். பின்னர் கடம்பவனேசுவரர் கோவிலுக்கு சென்று கடம்பவனேசுவரரை வழிபட்டு சென்றனர். இதேபோல் தவுட்டுப்பாளையம், மாயனூர், நெரூர், வாங்கல் உள்பட காவிரி கரையோர பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யப்பட்டது. 


தொடர்புடைய செய்திகள்

1. மன்னார்குடி ராமநாதசாமி கோவிலில் தீர்த்த உற்சவம் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்
திருராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி தீர்த்த உற்சவம் நடந்தது. திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் திரளானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
2. ஆடி அமாவாசையையொட்டி தாமிரபரணி ஆற்றில் தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் குவிந்தனர்
ஆடி அமாவாசையையொட்டி குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் குவிந்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை