பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 14 ஆயிரத்து 838 மலிவு விலை வீடுகள்


பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 14 ஆயிரத்து 838 மலிவு விலை வீடுகள்
x
தினத்தந்தி 12 Aug 2018 5:57 AM IST (Updated: 12 Aug 2018 5:57 AM IST)
t-max-icont-min-icon

நவிமும்பையில் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 14 ஆயிரத்து 838 மலிவு விலை வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

மும்பை,

நவிமும்பை தலோஜா, கலம்பொலி, கார்கர், கன்சோலி, துரோநகரி உள்ளிட்ட 11 இடங்களில் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் குறைந்த வருமானம் உடையவர்களுக்காக 14 ஆயிரத்து 838 மலிவு விலை வீடுகளை நகர மற்றும் தொழில் மேம்பாட்டு கழகம் (சிட்கோ) கட்டி வருகிறது.

இந்த மலிவு விலை வீடுகளுக்கான குலுக்கல் அக்டோபர் மாதம் 2-ந் தேதி அன்று நடக்கிறது. முன்னதாக இந்த வீடுகளுக்கான ஆன்லைன் பதிவு நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. சிட்கோவின் இந்த மலிவு விலை வீடுகளை வாங்க விரும்புபவர்கள் செப்டம்பர் 17-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை சிட்கோ நிர்வாக இயக்குனர் லோகேஷ் சந்திரா தெரிவித்தார். 

Next Story