தண்டராம்பட்டு ஒன்றியத்தில் மத்திய சுகாதார குழு ஆய்வு


தண்டராம்பட்டு ஒன்றியத்தில் மத்திய சுகாதார குழு ஆய்வு
x
தினத்தந்தி 13 Aug 2018 4:15 AM IST (Updated: 13 Aug 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

தண்டராம்பட்டு ஒன்றியத்தில் மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு நடத்தினர்.

தண்டராம்பட்டு,

தண்டராம்பட்டு ஒன்றியத்தில் மத்திய அரசின் நிதி உதவியின் கீழ் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் நடைபெற்று வரும் தூய்மை பணிகள், சுகாதார பணிகளை ஆய்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து மத்திய சுகாதார குழுவை சேர்ந்த காமராஜ், செல்வகுமார் ஆகியோர் தண்டராம்பட்டு ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து பதிவேடுகளையும், ராயண்டபுரம் ஊராட்சிக்கு சென்று கள ஆய்வு பணிகளையும் மேற்கொண்டனர்.

ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.பி.மகாதேவன், பரிமேலழகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story