மாவட்ட செய்திகள்

கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை + "||" + Young woman commits suicide by jumping into the well

கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை
சிவகிரி அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகிரி, 


நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கருங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சின்ன முனியான்டி. அவருடைய மகள் காயத்திரி (வயது 17). இவர் ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது சம்பள பணத்தை வீட்டில் சரியாக கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை அவருடைய பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த காயத்திரி சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றார். வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப் பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் காயத்திரி பிணமாக மிதந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அதிகாரி செல்வ முருகேசன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். கிணற்றுக்குள் இறங்கி காயத்திரியின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து சிவகிரி போலீசில் சின்ன முனியாண்டி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். காயத்திரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், வீட்டில் சம்பள பணத்தை கொடுக்காததை பெற்றோர் கண்டித்ததால் காயத்திரி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 


தொடர்புடைய செய்திகள்

1. பல்லடம் அருகே: இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காதலன் கைது
பல்லடம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக காதலனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
2. நெல்லையில் திருமணம் முடிந்து 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
திருமணம் முடிந்து 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நெல்லை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
3. செஞ்சி அருகே இளம்பெண், விஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை
செஞ்சி அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. திருமணமான 6 மாதத்தில் விஷம் குடித்து இளம்பெண் சாவு
தஞ்சையில், திருமணமான 6 மாதத்தில் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
5. திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
விருத்தாசலத்தில் திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.