மாவட்ட செய்திகள்

இரும்பு கம்பி தலையில் விழுந்து தொழிலாளி பரிதாப சாவு + "||" + The iron wire fell on the head and the death of the worker

இரும்பு கம்பி தலையில் விழுந்து தொழிலாளி பரிதாப சாவு

இரும்பு கம்பி தலையில் விழுந்து தொழிலாளி பரிதாப சாவு
கங்கைகொண்டான் அருகே, கல்குவாரியில் வேலை பார்த்த போது இரும்பு கம்பி தலையில் விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தாழையூத்து, 


நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள பருத்திகுளம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது 45). இவர் அந்த பகுதியில் இத்திகுளத்தில் உள்ள ஒரு கல்குவாரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று பவுன்ராஜ் கல்குவாரியில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கடப்பாரை கம்பியால் பாறாங்கல்லை உருட்டி தள்ளினார்.
எதிர்பாராத விதமாக அந்த கம்பி நழுவி பவுன்ராஜ் தலையில் விழுந்தது.


இதில் பலத்த அடிபட்டு பவுன்ராஜ் மயங்கி விழுந்தார். இதனால் உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் பவுன்ராஜ் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல் உடைக்கும் போது இரும்பு கம்பி தலையில் விழுந்து தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.