‘தினத்தந்தி’ மற்றும் ‘சத்யா’ இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி-விற்பனை


‘தினத்தந்தி’ மற்றும் ‘சத்யா’ இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி-விற்பனை
x
தினத்தந்தி 13 Aug 2018 3:00 AM IST (Updated: 13 Aug 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ மற்றும் ‘சத்யா’ இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி-விற்பனை சென்னையில் நேற்று தொடங்கியது.

சென்னை,

‘தினத்தந்தி’ மற்றும் ‘சத்யா’ நிறுவனம் இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் தள்ளுபடி மற்றும் சலுகைகள் கண்காட்சி-விற்பனை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. கண்காட்சியை சத்யா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜான்சனின் மூத்த மகன் ஜாக்சன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

பின்னர், சத்யா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜான்சன், அவருடைய மனைவி கிறிஸ்டி ஜான்சன், இளைய மகன் ரோஷன், பஜாஜ் பைனான்ஸ் மண்டல மேலாளர் இளவேனில், புளூ ஸ்டார் நிறுவனத்தின் பொது மேலாளர் தீன், அபி இம்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் லட்சுமணன், சோனி நிறுவனத்தின் மேலாளர் கணேஷ் ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள்.

நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) வரை 4 நாட்கள் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.

கண்காட்சியில் சாம்சங், ஹையர், சோனி, எல்.ஜி., டைகின், வேர்ல்பூல், ஐ.எப்.பி., பானசோனிக், கோத்ரேஜ், பேபர், இன்டெக்ஸ், பட்டர்பிளை, எவரெஸ்ட், புளூ ஸ்டார், கேரியர், ஹிட்டாசி, ஒனிடா, வோல்டாஸ், ஓஜெனரல், வீ-கார்டு ஆகிய முன்னணி நிறுவனங்களின் பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டி.வி., மிக்சி, கிரைண்டர், ஏ.சி., வாட்டர் ஹீட்டர், மைக்ரோவேவ் ஓவன், இன்டக்‌ஷன் ஸ்டவ் உள்பட பல்வேறு பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

சுமார் 120-க்கும் மேற்பட்ட அரங்குகளில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மட்டுமல்லாது, வீட்டுக்கு தேவையான பர்னிச்சர்கள் மற்றும் இதர பொருட்களை ஒருங்கே ஒரே கூரையின் கீழ் வாங்கும் விதமாக இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

வாடிக்கையாளர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் விதமாகவும், மனங்களை கவரும் விதமாகவும் ‘உங்கள் சத்யா’ நிறுவனம் பல்வேறு சிறப்பு சலுகைகளுடன், ஆடி தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றனர். வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

வாடிக்கையாளர்களை குளிர்விக்கும் வகையில் ஏராளமான மாடல்களில், பல்வேறு வண்ணங்களில் விதவிதமான ஏ.சி.க்கள் கண்காட்சியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. வேறு எங்கும் கிடைக்காத விலையில் ஆடிமாத சிறப்பு சலுகையாக குறைந்த விலையில் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப வாங்க எளிய தவணை முறை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு எப்படி சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறதோ? அதேபோலவே பர்னிச்சர்களுக்கும் பல்வேறு சலுகைகள் கண்காட்சியில் வாரி வழங்கப்படுகின்றன. கண்காட்சியில் இடம்பெற்று இருக்கும் ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டு ஆடி தள்ளுபடி விலையில் பர்னிச்சர்களை வைத்து இருக்கின்றனர்.

இதுகுறித்து சத்யா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜான்சன் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘தினத்தந்தி’யுடன் இணைந்து இந்த கண்காட்சியை நடத்துவது பெருமையாக இருக்கிறது. இந்த கண்காட்சியை வெற்றிகரமாக 4-வது ஆண்டாக தினத்தந்தியுடன் இணைந்து நடத்துகிறோம். உங்கள் சத்யாவில் உலகத்தரத்திலான பொருட்களை நிறுவனங்களின் உத்தரவாதத்துடன் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஏராளமான சிறப்பு சலுகைகளை நாங்கள் அறிவித்து இருக்கிறோம்.

ஆடி தள்ளுபடியாக அனைத்து ரக ஏ.சி. மாடல்களும் வேறு எங்கும் இல்லாத வகையில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் இதை பயன்படுத்தி வாங்கி கொள்ளலாம். எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாடிக்கையாளர்கள் உங்கள் சத்யாவில் நம்பகத்தன்மையுடன் வாங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

சிறப்பு சலுகைகள்


* ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு 3 லிட்டர் பிரஷர் குக்கர் இலவசம்.

* ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு பிளாஸ்டிக் டிரம் அல்லது பிளாஸ்டிக் வாளி இலவசம்.

* பைனான்ஸ் மூலம் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு சோனி ‘ஹெட்போன்’ இலவசம்.

* குறிப்பிட்ட மாடல் ஏ.சி.க்களுக்கு இன்டக்‌ஷன் ஸ்டவ் அல்லது வாக்கியூம் கிளனர் இலவசம்.

* பிரிட்ஜ் வாங்குபவர்களுக்கு 3 லிட்டர் குக்கர் இலவசம்.

* வாஷிங்மெஷின் வாங்குபவர்களுக்கு அதற்கான கவர் இலவசம்.

* பஜாஜ் பைனான்ஸ் மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு 100 சதவீதம் கேஷ்பேக் ஆபர் வழங்கப்படுகிறது.

* குறிப்பிட்ட மாடல் சாம்சங் வாஷிங் மெஷினுடன் ரூ.13,990 மதிப்புள்ள காலெக்ஸி ஜெ-6 செல்போன் இலவசம்.

* 32 அங்குலம் எல்.இ.டி. டி.வி. மற்றும் பானசோனிக் ஹோம் தியேட்டர் இரண்டும் சேர்த்து ரூ.16,990 மட்டுமே.

* வாட்டர் பியூரிபயர், வாக்கியூம் கிளனர், 3 லிட்டர் பிரஷர் குக்கர் அனைத்தும் சேர்த்து ரூ.16,990 மட்டுமே.

* 2 லிட்டர் டேபிள் டாப் கிரைண்டர், 3 ஜார் மிக்சி, 3 லிட்டர் பிரஷர் குக்கர் அனைத்தும் சேர்த்து ரூ.3,990 மட்டுமே.

Next Story