பூலாம்பட்டி காவிரி ஆற்றில் தாசில்தார் ஆய்வு


பூலாம்பட்டி காவிரி ஆற்றில் தாசில்தார் ஆய்வு
x
தினத்தந்தி 13 Aug 2018 4:15 AM IST (Updated: 13 Aug 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

பூலாம்பட்டி காவிரி ஆற்றில் தாசில்தார் ஆய்வு நடத்தினார்.


எடப்பாடி,

கர்நாடகாவில் மீண்டும் கனமழை பெய்ததால் காவிரி ஆற்றில் 1 லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்ததை தொடர்ந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதனால் பூலாம்பட்டியில் விசைபடகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு, எடப்பாடி தாலுகா பகுதியில் உள்ள காவிரி கரையோர பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றின் கரை ஓரமாக குளிப்பது, துணி துவைப்பது, கரையில் இருந்து வேடிக்கை பார்ப்பது மற்றும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று வேண்டுகோள் விடப்பட்டது. அதைத்தொடர்ந்து எடப்பாடி தாசில்தார் கேசவன், வருவாய் ஆய்வாளர் செங்கோட்டையன், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து ஆகியோர் பூலாம்பட்டி காவிரி ஆற்றிற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Next Story