மாவட்ட செய்திகள்

சமையல் செய்த போது பரிதாபம்: சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு + "||" + Poor when cooking: fire in the sari and kill the murderer

சமையல் செய்த போது பரிதாபம்: சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு

சமையல் செய்த போது பரிதாபம்: சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு
குமாரபாளையத்தில் சமையல் செய்த போது சேலையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
குமாரபாளையம்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த குட்டியப்பன் என்பவரின் மனைவி காமாட்சி (வயது 84). குட்டியப்பன் ஏற்கனவே இறந்து விட்டார். காமாட்சிக்கு ரங்கநாதன் என்ற மகன் உள்ளார். அவர் தறித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மூதாட்டி காமாட்சி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருடைய சேலையில் தீப்பிடித்தது.

இதில் தீ மளமளவென மூதாட்டியின் உடல் முழுவதும் பரவியது. உடல் கருகி வலியால் அலறி துடித்த காமாட்சியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காமாட்சி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமையல் செய்த போது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.