கடலூரில் மாவட்ட அளவிலான ஓவிய போட்டி 750 பேர் ஆர்வமுடன் பங்கேற்பு


கடலூரில் மாவட்ட அளவிலான ஓவிய போட்டி 750 பேர் ஆர்வமுடன் பங்கேற்பு
x
தினத்தந்தி 13 Aug 2018 3:30 AM IST (Updated: 13 Aug 2018 5:20 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் மாவட்ட அளவிலான ஓவிய போட்டி நடந்தது. இதில் 750 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

கடலூர், 


கடலூர் மாவட்ட அளவிலான ஓவிய போட்டி டவுன்ஹாலில் நேற்று நடந்தது. போட்டியை கிருஷ்ணசாமி பள்ளி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகன் முன்னிலை வகித்தார்.

இதைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கனவு உலகம், பழக்கூடை, கடற்கரை, பாரம்பரிய விளையாட்டு, மழைக்காலம், எனது பார்வையில் கடலூர், நமது எதிர்காலம் என்ற தலைப்புகளிலும், பெரியவர்களுக்கு கிராமம் என்னும் தலைப்பிலும் ஓவிய போட்டி நடந்தது.

இதில் மாணவ-மாணவிகள், பெரியவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தனர். முன்னதாக போட்டி நடந்த வளாகத்தில் குழந்தை தூங்குவது போன்ற மணல் சிற்பம், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகளை விளக்கியும் ஓவியம், வாசகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் ஜெயராமன், வண்ணவியல் துறை பேராசிரியர் ராஜாராமன், டாக்டர்கள் இளந்திரையன், சிவசக்திவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் மாவட்டம் முழுவதில் இருந்தும் 750 பேர் கலந்து கொண்டதாக ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தெரிவித்தார். 

Next Story