வெளிநாட்டில் வேலைக்கு சென்றபோது மாயமான வாலிபரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்
வெளிநாட்டில் வேலைக்கு சென்றபோது மாயமான வாலிபரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவருடைய பெற்றோர் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு கொடுத்தனர்.
நாகர்கோவில்,
வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதேபோல் திங்கட்கிழமையான நேற்றும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமுக்கு, கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி மனுக்கள் வாங்கினார்.
அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் ஏராளமான கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மக்கள் நீதி மய்யத்தின் குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சசி தலைமையில் நிர்வாகிகள் பலர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் அவர்கள், “இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் தமிழ்நாடு பஞ்சாயத்துக்கள் சட்டம் ஆகியவற்றின்படி வருகிற 15–ந் தேதி(நாளை) சுதந்திர தினத்தன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துக்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுவதையும், அது முறையாக நடத்தப்படுவதையும் தாங்கள் உறுதி செய்ய வேண்டும்“ என கூறியிருந்தனர்.
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் (விடுதலை) மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து தலைமையில், நிர்வாகிகள் வக்கீல் சேசுராஜா, சுசீலா, மணவை கண்ணன் உள்பட பலர் மனு கொடுத்தனர். அதில் “குளச்சல் அருகே பனவிளையில் 22 ஆண்டுகளாக வழிபாட்டுத்தலம் ஒன்றில் வழிபாடு நடத்தி வருகிறார்கள். இதனை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு போலீஸ் அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் துணைபோகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்“ என்று கூறியிருந்தனர்.
ஈத்தாமொழி அருகே உள்ள தர்மபுரத்தை சேர்ந்தவர் முத்துவடிவு நாடார். இவருடைய மனைவி தங்ககனி. இவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அதில், “தங்களது மகன் என்ஜினீயர் ராமச்சந்திர பெருமாள் (வயது 24) வெளிநாட்டுக்கு(குவைத்துக்கு) வேலைக்கு சென்றிருந்தான். அங்கு வேலைபார்த்து வந்த ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த ஒருவரின் அறையில் தங்கியிருந்தபோது காணாமல் போய்விட்டான் என்பது தெரிய வந்தது.
அவன் என்ன ஆனானோ? என்று வேதனையாக இருக்கிறது. எனவே மாயமான எங்கள் மகனை குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்“ என்று கூறியிருந்தனர்.
ஆறுகாணி முன்னாள் கவுன்சிலர் சின்னம்மா தலைமையில், ஊர்மக்கள் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
நாங்கள் களியல் கிராமம், கடையல் பேரூராட்சிக்கு உட்பட்ட 2 மற்றும் 3–ம் வார்டுகளில் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் பத்துகாணி பகுதியில் ஆதிதிராவிட உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியும், ஆறுகாணியில் உயர்நிலைப்பள்ளியும் மற்றும் மசூதிகள், கோவில்கள், கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் மற்றும் திருத்தலங்களான காளிமலைகோவில், குருசுமலை ஆலயம் போன்ற வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. 3,500–க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் 20 ஆண்டுகளுக்கு முன் சாராயம் காய்ச்சும் தொழில் நடந்து. ஆறுகாணியில் போலீஸ் நிலையம் வந்தபிறகு சாராயம் காய்ச்சும் தொழிலை கைவிட்டு, மது அருந்தும் பழக்கத்தையும் கைவிட்டு எங்கள் ஊரானது அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. தற்போது ஆறுகாணி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை வருவதாக அறிகிறோம். இந்த கடை வந்தால் எங்கள் ஊரில் அமைதி, ஒற்றுமை சீர்குலைந்துவிடும் என அஞ்சுகிறோம். அதனால் டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்க முயற்சிப்பதை நிறுத்த ஆணை பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குளச்சலை சேர்ந்த மேரி சசிகலா என்பவர் தலைமையில், சிலர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில், “கடந்த ஏப்ரல் மாதம் 27–ந் தேதி குளச்சல் மகளிர் கூட்டுறவு சங்கத்துக்கு நடந்த தேர்தலில் எனது தலைமையிலான 7 பேர் வெற்றி பெற்றோம். கடந்த 11–ந் தேதி நடந்த பதவி ஏற்பு விழாவுக்கு எங்களையும் அழைத்திருந்தார்கள். நான் உள்ளிட்ட 4 உறுப்பினர்கள், செல்வதற்கு முன்பாகவே தலைவர், துணைத்தலைவரை தேர்ந்தெடுத்துவிட்டதாக கூறினார்கள். இதில் எங்கள் 4 பேருக்கும் சிறிதளவு பங்குகூட கிடையாது. சங்கத்தில் உள்ளவர்கள் எங்களுக்கு எந்தவித ஒத்துழைப்பும் தரவில்லை. எனவே தங்களது தலைமையில், இந்த பதவி ஏற்பு விழாவை எனது தலைமையிலான 7 பேரையும் வைத்து நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்“ என கூறியிருந்தனர்.
தாழக்குடி நீர்நிலை பாதுகாப்பு இயக்க தலைவர் ராஜா தலைமையில் கொடுத்த மனுவில், “நாகர்கோவில்– நெல்லை பிரதான சாலையில் தேரேகால்புதூரில் இருந்து வடக்கே பிரிந்து செல்லும் வீராணமங்கலம் சாலை மிகவும் ஆபத்தான நிலையில் ஒற்றை வழிச்சாலையாக இருக்கிறது. இந்த சாலையில் அரசு பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் உள்ளிட்ட வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. நேற்று (அதாவது நேற்று முன்தினம்) நடந்த விபத்தில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார். எனவே இதை கருத்தில் கொண்டு சாலையை விரிவுபடுத்தி, இருபுறமும் தடுப்புச்சுவர் அமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என கூறப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story