கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தர்ணா


கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தர்ணா
x
தினத்தந்தி 14 Aug 2018 4:45 AM IST (Updated: 14 Aug 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சுகப்பிரசவம் நடைபெற மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வலியுறுத்தி பரமக்குடியை சேர்ந்த தர்மராஜன் என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் தர்மராஜன் (வயது60). இவர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–

 இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சுகப்பிரசவம் நடைபெற மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். தற்போது நாடு முழுவதும் சுகப்பிரசவமே இல்லாத அளவுக்கு அறுவை சிகிச்சைகள் மூலமே பெரும்பாலான பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கர்ப்பிணிகளுக்கு மருத்துவ பரிசோதனை, மருந்து மாத்திரைகள், அறுவை சிகிச்சை என ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. அனைத்து தரப்பினரும் அரசு மருத்துவமனைக்கு செல்வதில்லை. எனவே இந்த பிரச்சினை குறித்து மத்திய அரசு கவனம் செலுத்தி அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் இயற்கை நியதிகளின்படி கட்டாயமாக சுகப்பிரசவம் நடைபெற வேண்டும் என்றும், மிக அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் தர்ணா போராட்டத்திலும் அவர் ஈடுபட்டார்.


Next Story