ரெயில் மோதி தொழிலாளி பலி


ரெயில் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 14 Aug 2018 3:15 AM IST (Updated: 14 Aug 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே ரெயில் மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

உளுந்தூர்பேட்டை, 


உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி காலனியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் ஆதிகேசவன் (வயது 21), கூலி தொழிலாளி. இவர் நேற்று மதியம் 12.30 மணி அளவில் தனது வீட்டின் பின்புறம் உள்ள விளை நிலத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அந்த வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் வருவதை கவனிக்காமல், அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஆதிகேசவன் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஆதிகேசவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ரெயில் மோதி பலியான ஆதிகேசவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story