திண்டுக்கல்லில் இருந்து கேரளாவுக்கு 7 டன் பூக்கள் அனுப்பப்பட்டது


திண்டுக்கல்லில் இருந்து கேரளாவுக்கு 7 டன் பூக்கள் அனுப்பப்பட்டது
x
தினத்தந்தி 14 Aug 2018 3:30 AM IST (Updated: 14 Aug 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

ஓணம் பண்டிகையை முன்னிட்டு திண்டுக் கல்லில் இருந்து கேரளா வுக்கு 7 டன் பூக்கள் நேற்று அனுப்பப்பட்டன.

முருகபவனம், 


கேரள மக்களின் முக்கிய மான பண்டிகைகளில் ஓணம் பண்டிகையும் ஒன்று. இதை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து ஓணம் பண்டிகை தொடங்கு வதற்கு 10 முதல் 15 நாட்களுக்கு முன்பே வியாபாரிகள் அங்கு பூக்களை விற்பனைக்கு அனுப்பி வைப்பார்கள். அதே போல் கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து பூக்களை வாங்கி அனுப்புவது உண்டு.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு பருவமழை பெய்து வருகிறது. மழை, வெள்ள பாதிப்புகளுக்கு பலர் உயிரிழந்துள்ளனர். இத் தகைய வெள்ள பாதிப்புகளில் இருந்து அவர்கள் மீண்டு அங்கு ஓணம் பண்டிகை களை கட்டுமா? என்பது கேள்விக் குறியாக இருந்தது.

இந்நிலையில் கேரளாவின் கோழிக்கோடு, திருச்சூர், திருவனந்தபுரத்தை சேர்ந்த வியாபாரிகள் திண்டுக்கல் பூமார்க்கெட்டுக்கு நேற்று வந்தனர். இவர்கள், சுமார் 7 டன் பூக்களை வாங்கி கேரளா வுக்கு லாரிகளில் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திண்டுக்கல் பூமார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறும் போது, வருகிற 25-ந் தேதி கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட இருக் கிறது.

ஆனால் அங்கு இருக்கும் வெள்ள பாதிப்பு சூழ்நிலையை பார்த்தால் ஓணம் பண்டி கையை சிறப்பாக கொண் டாடும் சூழல் வருமா? என்பது கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் அங்கிருந்து வியா பாரிகள் இங்கு வந்து பூக்களை வாங்கி அனுப்பியதில் இருந்து இனி நாள்தோறும் அதிகளவில் பூக்களை அனுப்பும் சூழ்நிலை உருவாகும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்றார்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வது வழக்கம். குறிப்பாக வாடாமல்லி கடந்த வருட ஓணத்தின் போது கிலோ ரூ.100-க்கு விற்பனை ஆனது. இதையொட்டி திண்டுக்கல் சுற்று வட்டார விவசாயிகள் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இதுவரை வாடாமல்லியை பறிக்காமல் செடிகளிலேயே விட்டு வைத்திருந்தனர்.

கேரளாவுக்கு பூக்கள் அனுப்பும் பணி நேற்று முதல் தொடங்கியதால் இனி வாடாமல்லியை அதிகளவில் பறித்து பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வருவார்கள். இந்த வருடம் நல்ல விலை கிடைக் கவும் வாய்ப்புள்ளது. 

Next Story