காதல் மனைவி பிரிந்து சென்றதால் தனியார் தொழிற்சாலை ஊழியர் தூக்குப்போட்டு சாவு
துமகூரு அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால் தனியார் தொழிற்சாலை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அவர் தனது தற்கொலைக்கான காரணத்தை முகநூலில் வீடியோவாக வெளியிட்டார்.
துமகூரு,
துமகூரு மாவட்டம் துருவகெரே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கள்ளதஒசஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவண்ணா. இவரது மகன் மோகன்கவுடா (வயது 26). இவரும் துருவகெரேயை சேர்ந்த வினுதாவும் காதலித்து வந்தனர். அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், மோகன்கவுடாவும், வினுதாவும் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு, பெங்களூருவில் மோகன்கவுடாவும், வினுதாவும் வசித்தனர். தனியார் தொழிற்சாலையில் ஊழியராக மோகன்கவுடா வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2 மாதங்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதே நேரத்தில் மோகன்கவுடாவுடன் வாழ வேண்டாம் என்று வினுதாவிடம், அவரது பெற்றோர் கூறியதாக தெரிகிறது. இதனால் ஒரு மாதத்திற்கு முன்பு மோகன்கவுடாவுடன் வாழ பிடிக்காமல் துருவகெரேயில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு வினுதா சென்றுவிட்டார். தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி வினுதாவை மோகன்கவுடா பலமுறை அழைத்தும், அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக மோகன்கவுடா மனம் உடைந்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கள்ளதஒசஹள்ளியில் உள்ள தன்னுடைய வீட்டில் மோகன்கவுடா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்யும் முன்பாக, அதற்கான காரணம் குறித்து பேசியதை வீடியோவாக எடுத்து, அதனை தனது முகநூலில் மோகன்கவுடா வெளியிட்டு இருந்தார்.
அதில், “என்னை விட்டு நீ பிரிந்து சென்றதால் மிகுந்த மனவேதனையை அனுபவித்து உள்ளேன். நீ சந்தோஷமாக வாழ் என்று கூறும் அளவுக்கு எனக்கு பெரிய மனசு இல்லை. நான் அனுபவித்த வேதனைகளை நீயும் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டும். எனது கண்ணீரும், என்னுடைய தாயின் கண்ணீரும் உன்னையும், உனது குடும்பத்தையும் சும்மா விடாது. என் முன்னால் அன்பாக பேசிவிட்டு, எனது முதுகில் குத்தி விட்டாய். இதுபோன்ற பெண்களை யாரும் நம்ப வேண்டாம்“ என்று மோகன்கவுடா பேசி இருந்தார்.
இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்று மோகன்கவுடாவின் உடலை கைப்பற்றி துருவகெரே போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது காதல் மனைவி வினுதா வாழ பிடிக்காமல் பிரிந்து சென்றதால் மோகன்கவுடா தற்கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் துருவகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வினுதாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story