பள்ளிக்கூட மாடியில் இருந்து குதித்த பிளஸ்-1 மாணவி


பள்ளிக்கூட மாடியில் இருந்து குதித்த பிளஸ்-1 மாணவி
x
தினத்தந்தி 14 Aug 2018 3:25 AM IST (Updated: 14 Aug 2018 3:25 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில், ஆசிரியை திட்டியதால் பள்ளிக்கூட மாடியில் இருந்து பிளஸ்-1 மாணவி கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை, 


தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள பாறைக்காட்டை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகள் தம்புராட்டி (வயது 17). இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

நேற்று மதியம் தம்புராட்டி திடீரென பள்ளிக்கூடத்தின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை ஆசிரியைகள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், தம்புராட்டியை அந்த பள்ளியில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியை ஒருவர் திட்டியதாகவும், இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்து உள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story