சுதந்திர தின விழாவை குழு அமைத்து கொண்டாடுங்கள் பள்ளிகளுக்கு இயக்குனரகம் சுற்றறிக்கை
சுதந்திர தின விழாவை குழு அமைத்து கொண்டாடுங்கள் என்று பள்ளிகளுக்கு இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை,
பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன், முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுதந்திர தினத்தை பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகங்கள், மாவட்டக்கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் நாளை (புதன்கிழமை) சிறப்பாக கொண்டாட தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென விழாக்குழு அமைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
ஆண்டுதோறும் சுதந்திர தினமான ஆகஸ்டு 15, குழந்தைகள் தினமான நவம்பர் 14, குடியரசு தினமான ஜனவரி 26 ஆகிய தேதிகளில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி சுதந்திர தின நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றவுடன் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த வேண்டும். இக்கூட்டத்தில் மாணவர்களின் வருகை, கற்றல் கற்பித்தல் பணிகள், பள்ளியின் வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகள் குறித்தும், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் தேவைகளை கேட்டறிந்து விவாதித்தும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story