ஊத்துக்கோட்டை அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்
ஊத்துக்கோட்டை அருகே உள்ள சிறிய வண்ணான்குப்பம், பெரிய வண்ணான்குப்பம், ஆத்துப்பாக்கம், தண்டலம் இடையேயான சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை,
இந்த சாலையை சீரமைக்க கோரி எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதை கண்டித்தும், சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரியும் கிராம பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், தே.மு.தி.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் நேற்று பெரிய வண்ணான் குப்பத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பபள்ளி எதிரே தரையில் விழுந்து உருளும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஊத்துக்கோட்டை போலீசார் மற்றும் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் நக்கீரன் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இன்னும் 28 நாட்களில் ரூ.60 லட்சம் செலவில் அங்கு தார் சாலை அமைக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்று அனைவரும் கலைந்துசென்றனர்.

Related Tags :
Next Story