சித்த மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம்
பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று தொடங்கியது.
நெல்லை,
பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் அரசு சித்த மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு சித்த மருத்துவ படிப்பில் முதலாம் ஆண்டில் 100 மாணவ-மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். இந்த 2018-19-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற இருக்கிறது.
இதையொட்டி நேற்று விண்ணப்பங்கள் வினியோகம் தொடங்கியது. பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் முதல்வர் நீலாவதி மாணவ-மாணவிகளுக்கு விண்ணப்ப படிவங்களை கொடுத்து தொடங்கி வைத்தார்.
மாணவ-மாணவிகள் வரிசையாக நின்று கல்லூரி அலுவலகத்தில் விண்ணப்பங்களை வாங்கிச்சென்றனர். விண்ணப்பத்தின் விலை பொது பிரிவினருக்கு ரூ.500, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.100 ஆகும். விண்ணப்பம் பெறுவதற்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வரைவோலையாக பெற்று கல்லூரியில் மனுவுடன் இணைத்து கொடுக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சான்றொப்பம் பெறப்பட்ட சாதி சான்றிதழ் மற்றும் பிளஸ்-2 சான்றிதழ் நகலை கொடுத்து விண்ணப்பத்தை பெற வேண்டும்.
நேற்று 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர். இந்த விண்ணப்பங்கள் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி வரை வினியோகம் செய்யப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சென்னையில் உள்ள முகவரிக்கு 5.9.2018 தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். அதைத் தொடர்ந்து கலந்தாய்வு நடத்தி மாணவ-மாணவிகளுக்கு கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
Related Tags :
Next Story