மணமேல்குடி அருகே கோடியக்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்
மணமேல்குடி கோடியக்கரையில் இறந்தநிலையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது.
மணமேல்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள கோடியக்கரை கடற்கரையில் இறந்த நிலையில் ஒரு டால்பின் கரை ஒதுங்கியது. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் கடலோர காவல்குழுமத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறை வன அலுவலர் ஆனந்தகுமார், வனவர் அந்தோணி, மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் கடற்கரைக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதையடுத்து அங்கு இறந்து கிடந்த 6அடி நீளமும் 80 கிலோ எடை கொண்ட டால்பினை மீட்டனர்.
தொடர்ந்து இதுகுறித்து பட்டுக்கோட்டையில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்குவந்த ஆராய்ச்சியாளர்கள் பாலாஜி, பிரேம்குமார் இறந்த டால்பின் உடலில் இருந்து மாதிரிகளை எடுத்தனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர் பாலசுப்ரமணியன் வந்து அந்த டால்பினை பிரேத பரிசோதனை செய்து, அப்பகுதியில் புதைத்தார் .

Related Tags :
Next Story