அனல் மின்நிலையம் அருகே ஒப்பந்ததாரர் கொலை: தேடப்பட்ட 8 பேர் பூந்தமல்லி கோர்ட்டில் சரண்


அனல் மின்நிலையம் அருகே ஒப்பந்ததாரர் கொலை: தேடப்பட்ட 8 பேர் பூந்தமல்லி கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 15 Aug 2018 3:45 AM IST (Updated: 15 Aug 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

வடசென்னை அனல் மின்நிலையம் அருகே ஒப்பந்ததாரர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 8 பேர் பூந்தமல்லி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

பூந்தமல்லி,

எண்ணூர் பர்மா நகரை சேர்ந்தவர் ஜேம்ஸ்பால் (வயது 45). ஒப்பந்ததாரரான இவர், வடசென்னை அனல் மின்நிலைய பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு ஜேம்ஸ்பால் காரில் சென்றார்.

அனல்மின்நிலையம் அருகே அவரை ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டது.

இதில் ஜேம்ஸ்பால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மீஞ்சூர் போலீசார் ஜேம்ஸ்பால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

8 பேர் சரண்

இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய மீஞ்சூரை சேர்ந்த குமார் என்கிற ராஜ்குமார் (27), எட்வின் (26), ராஜா என்கிற நித்தேஷ்வரன் (26), நேதாஜி (26), தனுஷ் (24), சூர்யா (24), சந்தோஷ் (25), செல்லா (24), ஆகிய 8 பேர் பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

இதனையடுத்து நீதிபதி உத்தரவின்பேரில் 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story