சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் அனுமதிக்கப்படாத பகுதிகள் எவை? அரசாணை வெளியீடு


சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் அனுமதிக்கப்படாத பகுதிகள் எவை? அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 15 Aug 2018 4:15 AM IST (Updated: 15 Aug 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் கட்ட அனுமதிக்கப்படாத பகுதிகள் எவை என்பது குறித்து அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை பெருநகர பகுதிக்கான மேம்பாட்டு ஒழுங்குமுறை விதியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று அரசுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) உறுப்பினர் செயலாளர் கடிதம் எழுதியிருந்தார். அதோடு சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பிற்கிணங்க, சில பகுதிகளில் அரசு அங்கீகாரத்துக்கு வரக்கூடிய அடுக்குமாடி கட்டிடங்கள் தொடர்பான வரைவு திருத்தங்களை அவர் அரசுக்கு அனுப்பியிருந்தார். இதுதொடர்பாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை பெருநகர பகுதியில் உள்ள சில இடங்களில் அடுக்குமாடி கட்டிடத்துக்கு அனுமதி கிடையாது. அதன்படி, பூங்காநகர் ரெயில் நிலையம் அருகில் உள்ள கூவம் ஆற்றில் இருந்து, அந்த ஆற்றின் முகத்துவாரமான நேப்பியர் பாலம் வரையில் (தீவுத்திடல் பகுதி) அடுக்குமாடி கட்டிடங்கள் கட்ட அனுமதியில்லை. செங்குன்றம் நீர்ப்பிடிப்பு பகுதிக்கும் இது பொருந்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story