குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 278 மனுக்கள்


குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 278 மனுக்கள்
x
தினத்தந்தி 15 Aug 2018 3:00 AM IST (Updated: 15 Aug 2018 2:35 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர், 

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் ரேஷன்கார்டு, வேலைவாய்ப்பு, கடனுதவி, குடிநீர் வசதி, சாலை வசதி, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 278 மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அவர் தாட்கோ வாயிலாக விருப்புரிமை நிதியில் இருந்து 9 பேருக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் தொழில் தொடங்க காசோலைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ரஞ்சித் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story