திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல்ஜோடி தஞ்சம்
திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல்ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த மணப்பாக்கத்தை சேர்ந்தவர் சிவகுமார். வேன் டிரைவர். இவர் கும்மிடிப்பூண்டியை அடுத்த தண்டலஞ்சேரியை சேர்ந்த சுருதி (வயது 18) என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்து அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சுருதியின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
இதை அறிந்த சுருதி, சிவகுமார் ஆண்டாள்குப்பத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதை தொடர்ந்து அவர்களுக்கு சுருதியின் பெற்றோர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்
இதையடுத்து காதல் ஜோடி தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னியிடம் இது தொடர்பாக மனு அளித்தனர்.
அதை பெற்றுக்கொண்ட அவர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story