சுதந்திர தினத்தையொட்டி விடுதிகளில் போலீசார் சோதனை
காஞ்சீபுரத்தில் உள்ள விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
காஞ்சீபுரம்,
இந்திய சுதந்திர தினம் இன்று (புதன்கிழமை) கொண்டாடப் படுகிறது. இதையொட்டி, எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க காஞ்சீபுரத்தில் உள்ள விடுதிகளில் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை, அனைத்து போலீஸ் சோதனை சாவடிகளில் வரும் வாகனங்கள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில், போலீசார் சோதனை நடத்தினர்.
Related Tags :
Next Story