ஜோக் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரிப்பு
ஜோக் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து உள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகையின் மூலம் ரூ.20 லட்சம் வருமானம் கிடைத்து உள்ளது.
சிவமொக்கா,
சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவில் உள்ளது ஜோக் நீர்வீழ்ச்சி. லிங்கனமக்கி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் இந்த நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும். இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமான இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
இந்த நிலையில் சிவமொக்கா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் லிங்கனமக்கி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஜோக் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து அதிகரித்து உள்ளது. ஜோக் நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் நீர்வீழ்ச்சியை புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
ந்த நிலையில் கடந்த 2 மாதங்களில் ஜோக் நீர்வீழ்ச்சிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளால் ரூ.20 லட்சம் சுற்றுலாத்துறைக்கு வருமானம் கிடைத்து உள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், சிவமொக்கா மாவட்டத்தில் அதிக மழை பெய்து வருவதால் லிங்கனமக்கி அணையில் இருந்து ஜோக் நீர்வீழ்ச்சிக்கு தொடர்ந்து தண்ணீர் வருகிறது. இதனால் நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். மற்ற நாட்களை காட்டிலும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது.
கடந்த 2 மாதங்களில் மட்டும் ஜோக் நீர்வீழ்ச்சிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளால் ரூ.20 லட்சம் வருவாய் கிடைத்து உள்ளது. இனி வரும் நாட்களில் வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

Related Tags :
Next Story