களம்பூரில் வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


களம்பூரில் வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Aug 2018 5:24 AM IST (Updated: 15 Aug 2018 5:24 AM IST)
t-max-icont-min-icon

களம்பூரில் வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆரணி,

ஆரணி அருகே களம்பூர் பஜார் வீதி எப்போதும் மிகவும் பரபரப்பாக இருக்கும். ஆரணி - போளூர் நெடுஞ்சாலையில் உள்ள இந்த வீதி வழியாக திருவண்ணாமலை, போளூர் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் பஜார் வீதி வழியாக செல்லும் வாகனங்கள் மிகவும் வேகமாக செல்வதாகவும், இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவ தாகவும் பொதுமக்கள் புகார் கூறினர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 விபத்துகளில் 2 பேர் பலியாகி உள்ளனர். இதனால் இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் கோரிக்கை வைத்த னர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ராஜீவ்காந்தி சிலை அருகே நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது உடனடியாக தடுப்புக்கம்பிகள் அமைத்து வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக தடுப்புக் கம்பிகள் (பேரி கார்டுகள்) அமைத்துத் தருவதாகவும், நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் தெரிவித்து வேகத்தடை அமைத்து தருவதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அங்கு சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story