வானவில் : புதிய போன் வாங்கப் போறீங்களா? ஒரு நிமிஷம்... இதைப் படிங்க...


வானவில் :  புதிய போன் வாங்கப் போறீங்களா? ஒரு நிமிஷம்... இதைப் படிங்க...
x
தினத்தந்தி 15 Aug 2018 5:58 AM GMT (Updated: 15 Aug 2018 5:58 AM GMT)

புதிதாக ஒரு மொபைல் வாங்க வேண்டுமெனில் நீங்கள் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டிய விஷயங்களை பற்றி பார்க்கலாம்:

* முதலில் உங்கள் பட்ஜெட் என்ன என்பதை தீர்மானித்து கொள்ளுங்கள்.

* அடுத்ததாக அந்த விலைக்குள் கிடைக்கக்கூடிய மொபைல் போன்களை பட்டியலிடுங்கள்.

* அந்த பட்டியலில் இருந்து தரமான கம்பெனி மொபைல்களை தேர்ந்தெடுங்கள்.

* சமீபத்தில் வெளியான மொபைல் போனை தேர்வு செய்வதே சிறந்தது. ஏனெனில் அதில் தான் புதிதாக நிறைய சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.

* நீங்கள் வாங்க நினைக்கும் போனில் ‘பிராஸசர்’ (processor) திறன் எவ்வளவு என்பதை கவனிக்க வேண்டியது மிக முக்கியம். இதை பொறுத்தே போனின் செயல்திறனும், பேட்டரியும் அமையும். உங்களுடைய பட்ஜெட் 7 ஆயிரம் ரூபாய் எனில் ஸ்னாப்ட்ராகன் 425 அல்லது 430 பிராஸசர் நல்ல தேர்வாகும். 10 ஆயிரம் ரூபாய் எனில், ஸ்னாப்ட்ராகன் 625 அல்லது 630 பிராஸசர் நீடித்த செயல்திறன் கொண்டதாகும்.

* மீடியாடெக் பிராஸசர்கள் இரண்டு ஆண்டுகள் வரை மட்டுமே உழைக்கின்றன. எனவே ஸ்னாப்ட்ராகன் தேர்ந்தெடுப்பது நன்மை பயக்கும்.

* போன் ‘டிஸ்பிளே’ 18:9 என்ற விகிதத்தில் இருப்பது நல்லது. இதனால் திரையில் தோன்றும் காட்சி பெரிதாகவும் தெளிவாகவும் இருக்கும்.

* நல்ல கேமரா அம்சம் பலருடைய முக்கிய எதிர்பார்ப்பாகும். 16 மெகா பிக்ஸல் திறன்கொண்ட டூயல் கேமராக்கள் முன்னும் பின்னும் அமையப்பெற்றது நல்ல தேர்வாகும்.

* மேலும் தானாகவே செயல்படும் சென்சார்கள், ஹெட்போன் உபயோகிக்ககூடிய அமைப்புகள், விரைவாக சார்ஜ் ஆகக்கூடிய பேட்டரி ஆகியவைகளையும் கருத்தில் கொண்டு நம்முடைய பட்ஜெட்டுக்குள் நல்ல மொபைல் போனை தேர்வு செய்யலாம்.

* உங்கள் தேவை மற்றும் பயன்பாட்டுக்கு ஏற்ப ரேம் மற்றும் பேட்டரியை தேர்வு செய்வது நல்லது. 

Next Story