வானவில் : கேமிங் லேப்டாப் விலை ரூ. 8 லட்சம்!
‘ஏசூஸ்’ நிறுவனம் கம்ப்யூட்டரில் விளையாடுவோருக்கென பிரத்யேகமான லேப்டாப்பை உருவாக்கி வெளியிட்டுள்ளது.
‘ஏசூஸ் ஆர்.ஓ.ஜி. ஜி.எக்ஸ் 800’ என்ற பெயரில் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும், இந்த லேப்டாப்பின் விலை ரூ.8 லட்சமாகும். மெக்கானிக்கல் கீ போர்டு அதாவது விளையாட்டுப் பிரியர்களுக்கான ஜாய் ஸ்டிக்கும் இந்த லேப்டாப்பில் உள்ளது.
க்வாட் கோர் 2.9 கிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ7 7820 ஹெச்கே பிராசஸர், 64 ஜிபி ரேம் மற்றும் மூன்று 512 ஜிபி பிசிஎல்இ எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் வசதி கொண்டுள்ளது. இது 18.4 அங்குல எல்.இ.டி. பேக்லைட் திரையுடன் வந்துள்ளது. இடையூறின்றி விளையாடும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. 3 யுஎஸ்பி போர்ட்களை இணைக்கலாம்.
கிகாபிட் எதர்நெட், ஹெச்டிஎம்ஐ போர்ட், மினி டிஸ்பிளே போர்ட், தண்டர்போல்ட் 3.0 மற்றும் 10 ஜிபிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி 3.1 (இரண்டாம் தலைமுறை) உள்ளிட்டவை இதில் உள்ள சிறப்பம்சமாகும். நீண்ட நேரம் விளையாடினாலும் பிராசஸர் மற்றும் கிராபிக் கார்டு சூடேறுவதை தடுக்கும் வசதியும் உள்ளது.
Related Tags :
Next Story