வானவில் : துல்லியமாக படம் பிடிக்கும் நிகான் D850


வானவில் : துல்லியமாக படம் பிடிக்கும் நிகான் D850
x
தினத்தந்தி 15 Aug 2018 12:23 PM IST (Updated: 15 Aug 2018 12:23 PM IST)
t-max-icont-min-icon

தொழில் முறை புகைப்படக் கலைஞர்களின் பிரதான தேர்வாக இருப்பது நிகான் கேமராக்கள்தான்.

ஜப்பானைச் சேர்ந்த இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளதுதான் ‘நிகான் டி 850’.

டி.எஸ்.எல்.ஆர். கேமராக்களில் துல்லியமாக மற்றும் விரைவாக புகைப்படம் எடுக்க உதவும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

45.4 மெகா பிக்ஸல், ஆட்டோ போகஸ்  153 பாயிண்ட் ஏஎப் கொண்டது. இதில் புகைப்படம் பிடிக்க வேண்டிய காட்சிகளை வியூ பைண்டரில் பார்த்து படம் பிடித்த பிறகு, அது சிறப்பாக வந்துள்ளதா? என்று சரி பார்க்க உதவும் 3.2 அங்குல மானிட்டர் டிஸ்பிளேவை தொடு திரையாக மாற்றியுள்ளனர்.

நிகானின் டி5 சிறப்பம்சமான 153 பாயிண்ட் ஏஎப் இதில் உள்ளது. இதனால் புகைப்படங்கள், வீடியோக்கள் மிக துல்லியமாக பதிவாகும். மெக்னீசியம் அலாய் உலோகத்தாலான மேற்பகுதி இதன் கடினத்தன்மைக்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.  இதன் விலை ரூ. 2,43,990.

Next Story