வானவில் : குறைந்த விலை ஸ்மார்ட் போன்


வானவில் : குறைந்த விலை ஸ்மார்ட் போன்
x
தினத்தந்தி 15 Aug 2018 12:28 PM IST (Updated: 15 Aug 2018 12:28 PM IST)
t-max-icont-min-icon

சமீபத்தில் அறிமுகமான ஸ்மார்ட்போன்களில் குறைந்த விலை கொண்டது, ஒப்போ ‘ரியல் மி 1’ (oppo realme 1) ஸ்மார்ட்போனாகும்.

இந்தியச் சந்தையில் விலைக்கு வந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்றும் இதை அழைக்கின்றனர். அழகிய வடிவமைப்பு, வலிமையான பிராசஸர் ஆகியவற்றுடன் குறைந்த விலைக்கு இதுவரையில் எந்த நிறுவனமும் இதைப்போன்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவில்லை.

3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம் மற்றும் 4 ஜி.பி. ரேம் மற்றும் 64 ஜி.பி. நினைவகம் மற்றும் 6 ஜி.பி. ரேம் 128 ஜி.பி. நினைவகம் ஆகியவற்றுடன் 3 மாடல்களில் இது வெளிவந்துள்ளது.

விலை முறையே ரூ.8,990, ரூ.10,990 மற்றும் ரூ.13,990 ஆகும்.  இது தவிர நிறுவனமே அறிமுக சலுகையாக இலவச ஸ்கிரீன் கார்டு மற்றும் ஷெல் கேஸ் ஆகியவற்றையும் அளிக்கிறது.

நவீன சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் மற்றும் பார்வைக்கு சிறப்பான தோற்றம் ஆகியவை கலந்த நவீன கலவையாக இந்த ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு வந்துள்ளது.

குறைந்த விலை என்ற போதிலும் இதன் செயல்பாடுகளில் எவ்வித குறையும் இல்லை. அதேசமயம் இதன் தோற்றப் பொலிவு பிரீமியம் ரக பிராண்டு ஸ்மார்ட்போன்களுக்கு இணையாக உள்ளது.

இதன் சுற்றுப் பகுதி உலோக பகுதிகளை (மெட்டாலிக் ரிம்) கொண்டிருப்பதால் தவறுதலாக கைநழுவி கீழே விழுந்தாலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை.

இது 6 அங்குல திரையும், 21601080 ரிசல்யூ‌ஷனும் கொண்டது. இதன் நினைவகத் திறனை 256 ஜி.பி. வரை நீட்டித்துக் கொள்ள முடியும். இதில் மூன்று ஸ்லாட்டுகள் உள்ளதால் இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ஒரு மெமரி கார்டையும் பயன்படுத்த முடியும்.

தற்போது வந்துள்ள பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் சிலவற்றில் இத்தகைய வசதி கிடையாது. இதில் 13 எம்.பி. ஸ்னாப்பர் எல்.இ.டி. பிளாஷ் கேமரா உள்ளதால் துல்லியமாக படம் பிடிக்கலாம். முன்பகுதியில் 8 மெகாபிக்ஸல் கேமரா இருப்பதால் செல்பி படமெடுப்பதிலும் சிரமம் இருக்காது.

Next Story