வானவில் : நீங்களும் கார் வாங்கலாம்...
செகன்ட் ஹேண்ட் காரை வாங்குவோருக்கான சில ஆலோசனைகள்:
1. சிறந்த மெக்கானிக்கை தேர்ந்தெடுங்கள். உங்களுக்கு அறிமுகம் இல்லாவிட்டால், கார் வைத்திருக்கும் நண்பர்கள், உறவினர்களிடம் மெக்கானிக் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். அவர் கார் வாங்கித் தர கேட்கும் கமிஷன் தொகையைக் குறைக்க முயலாதீர்கள். அப்போதுதான் உங்களுக்கு நல்ல கார் கிடைக்கும்.
2. ஒரு காரின் செயல்பாடு சிறப்பாக உள்ளதா என்பதை அந்த காரை ஸ்டார்ட் செய்து பார்த்தாலே தெரிந்து விடும். அதை ‘ஐடிலிங்’ செய்து என்ஜின் சத்தத்தை வைத்தே காரின் செயல்பாட்டை மெக்கானிக்கு கூறிவிடுவர்.
3. செகன்ட் ஹேண்ட் காரை வாங்க முடிவு செய்த பிறகு உங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்த வகையிலான காரைத் தேர்வு செய்யுங்கள். அடிக்கடி வெளியூர் செல்பவர்கள் ‘செடான்’ வகை காரை தேர்வு செய்யலாம். நகர்ப்புறங்களில் அலுவலகம் சென்று வர மட்டும்தான் எனில் சிறிய ரக ஹாட்ச் பேக் கார் போதுமானது.
4. நாம் தேர்ந்தெடுக்கும் காரின் விலையை ஆன்லைனில் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
5. தனியார் நிறுவனங்களை விட கார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் செகன்ட் ஹேண்ட் காரை நம்பி வாங்கலாம். உதாரணத்திற்கு மாருதி, மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் செகன்ட் ஹேண்ட் கார் விற்பனையகங்களை அணுகலாம்.
6. பைனான்ஸ் நிறுவனங்களும் செகன்ட் ஹேண்ட் கார்களுக்கு சுலப தவணையில் கடன் வழங்குகின்றன. குறைந்த வட்டியில் கடன் வழங்கும் நிறுவனத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
7. காரை தேர்வு செய்த பிறகு அதன் ஆர்.சி. புத்தகம், சாலை வரி, வாகனத்தின் மீது கடன் உள்ளதா என்பதை சரி பார்க்கவும். கடன் வாங்கியிருந்தால், அதை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கொடுத்து கடன் பதிவை நீக்கிய பிறகே உங்கள் பெயருக்கு பதிவு செய்ய வேண்டும்.
8. காரின் ஆர்.சி. புத்தகத்தில் உள்ள எண், என்ஜின் எண் ஆகியன சரியாக உள்ளனவா என்பதை கவனமுடன் பரி சீலனை செய்ய வேண்டும்.
9. கார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பழைய கார்களை வாங்கினால், அவை ஓராண்டு வரை உத்தரவாதம் அளிக்கின்றன. அத்தகைய கார்களை வாங்குவது உங்களுக்கு பல சிரமங்களைக் குறைக்கும்.

Related Tags :
Next Story