வானவில் : பிரபலமானவர்களின் வாகனம் - கலைஞரைக் கவர்ந்த ‘அம்பாசிடர்’
மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு மிகவும் பிடித்தமான கார் அம்பாசிடர்.
உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்களின் போது அம்பாசிடர் காரில் பயணிப்பது கருணாநிதிக்கு விருப்பமாகும்.
கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது ஹுண்டாய் கார் நிறுவனம் 100 ஆக்சென்ட் ரக கார்களை தமிழக அரசுக்கு பரிசாக அளித்தது. அவை அனைத்தையும் காவல்துறை ரோந்து வாகனமாக பயன்படுத்த கருணாநிதி உத்தரவிட்டார்.
அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது பல்வேறு வெளிநாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னையில் தங்களது தொழிற்சாலையை நிறுவின. மேலும் பல்வேறு வெளிநாட்டு கார்கள் விற்பனையும் அமோகமாக இருந்தது. இருந்தபோதிலும் அவர் தனது சொந்த உபயோகத்துக்கு அம்பாசிடர் காரையே பயன்படுத்தினார்.
பின்னாளில் முதுகு வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர் பெரும்பாலும் சக்கர நாற்காலியில் பயணிக்க வேண்டியிருந்தது. இதற்காக சக்கர நாற்காலியை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இனோவா காரை அவர் தேர்ந்தெடுத்தார். அதன் பிறகு அவர் இனோவா காரில் பயணித்தார். இருப்பினும் அவரது ஆதர்ச காராக அம்பாசிடர்தான் இருந்தது.

Related Tags :
Next Story