வானவில் : இந்த காருக்கு நீங்களும் பெயர் வைக்கலாம்
பொதுவாக மோட்டார் சைக்கிள், கார்களுக்கு அவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் தான் பெயர் சூட்டும்.
இப்போது புதிய கார் ஒன்றுக்கு பெயர் சூட்டும் பொறுப்பை மக்களிடமே வழங்க உள்ளது ஹுண்டாய் நிறுவனம். இதுபற்றி காண்போம்.
சென்னையை அடுத்த இருங் காட்டுக்கோட்டையில் செயல்படும் கொரிய கார் தயாரிப்பு நிறுவனம் ஹுண்டாய். வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய மாடல் காரை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்தக் கார் தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கார் முற்றிலுமாக அடையாளம் தெரியாத வகையில் ‘கவர்’ செய்யப்பட்டு நாட்டின் பல பகுதிகளில் சோதனை ஓட்டமும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தட்ப வெப்ப நிலையிலும் புதிய ரகக் கார் எவ்விதம் செயல்படுகிறது, தொடர்ந்து எத்தனை கிலோ மீட்டர் தூரம் எவ்வித இடையூறுமின்றி பயணிக்கிறது என்பன போன்ற சோதனைகள் நடத்தப்படுகின்றன.
இந்தக் காருக்கு ஹுண்டாய் நிறுவனம் தற்காலிகமாக சூட்டிய பெயர் ‘ஏஹெச்2’ (AH2). ஆனால் இந்த காருக்கு புதுமையான பெயர் ஒன்றை பொதுமக்கள் தேர்வு செய்யலாம் என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய ஹுண்டாய் காருக்கு பெயர் தேர்ந்து எடுக்கும் இந்த போட்டி நாளை (16-ந் தேதி) தொடங்கி ஒரு மாதம் வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டி தொடர்பான விவரங்களை இந்நிறுவனம் விளம்பரமாக வெளியிட உள்ளது. சரியான பெயரை தேர்வு செய்து அனுப்புவோருக்கு கவர்ச்சிகரமான பரிசுகளை அளிக்கவும் ஹுண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக புதிய மாடல் காரை அறிமுகப்படுத்த ஹுண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புதிய காருக்கு பெயர் சூட்டி பரிசுகளை நீங்களும் வெல்லலாம்.
2-வது பெரிய நிறுவனம்
கார் உற்பத்தியில் இந்தியாவில் இரண்டாவது பெரிய நிறுவனமாக ஹுண்டாய் திகழ்கிறது. இதன் உற்பத்தி ஆலையில் 33 விநாடிக்கு ஒரு கார் தயாரிக்கப்படுகிறது. (கார் தயாரிப்பில் முதலிடத்தில் இந்திய, ஜப்பான் கூட்டணியில் செயல்படும் மாருதி சுஸுகி நிறுவனம் உள்ளது).
ஹுண்டாய் நிறுவனம் தற்போது ஆண்டுக்கு 7.13 லட்சம் கார்களைத் தயாரிக்கிறது. இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஆலையின் உற்பத்தித் திறனை அடுத்த இரண்டு ஆண்டு களில் 10 லட்சமாக உயர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
புதிய மாடல் கார்கள்
கார் விற்பனையை அதிகரிக்க இந்நிறுவனம் தொடர்ந்து புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. 2020-ம் ஆண்டுக்குள் 8 புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்யப் போவதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஒய்.கே.கூ தெரிவித்துள்ளார்.
1998-ம் ஆண்டில் சென்னையில் உற்பத்தியைத் தொடங்கிய இந்நிறுவனம் தற்போது 20 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது. ஹுண்டாய் கார்கள் சென்னையில் இருந்து 87 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் மட்டும் இந்நிறுவனத்துக்கு 958 விநியோகஸ்தர்கள் உள்ளனர். ஹுண்டாய் நிறுவன வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 54 லட்சத்தை தொட்டுள்ளது.
இந்நிறுவனத்துக்கு மிகவும் பெருமை சேர்த்த கார் என்றால், அது சான்ட்ரோவையே சாரும். சான்ட்ரோ காரை டால் பாய்’ என்றும் அழைப்பர். மிகவும் பிரபலமான இந்த கார் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. இருந்தாலும் இந்தக் காரை மீண்டும் தயாரிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் பரவலாக எழுந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டே ‘ஏஹெச்2’ மாடல் காரை, ஏறக்குறைய சான்ட்ரோவைப் போலவே ஹாட்ச்பேக் மாடலாக தயாரித்துள்ளனர்.
இயான் உற்பத்தி நிறுத்தம்
ஹுண்டாய் நிறுவனம் தனது இயான் (Eon) மாடல் கார் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது. வரும் டிசம்பர் மாதத்தோடு இந்த கார் உற்பத்தி நிறுத்தப்படும் என நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2011-ம் ஆண்டு ‘இயான்’ மாடல் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்த நான்கு ஆண்டுகளாக இதன் விற்பனை சீராக உள்ளது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் 60,495 ‘இயான்’ மாடல் கார்கள் விற்பனையாகியுள்ளன. இருப்பினும் இதைத் தொடர்ந்து வந்த ‘கிராண்ட் ஐ10’ மற்றும் ‘எலைட் ஐ 20’ மாடலுடன் ஒப்பிடுகையில் இதன் விற்பனை குறைந்துதான் காணப்படுகிறது. இதனால் உற்பத்தியை நிறுத்தும் முடிவுக்கு ஹுண்டாய் தள்ளப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய பாதுகாப்பு விதிகளை இயான் மாடல் கார் பூர்த்தி செய்யாது என்று நிறுவனம் கருதுவதால் அந்தக் காரின் உற்பத்தியை நிறுத்துகிறார்கள். இந்த காருக்கான உதிரி பாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கும் இது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு விட்டன.
புதிய மாடல் கார்களை மத்திய அரசின் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப தயாரிக்கவும் இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் புதிய பாதுகாப்பு விதிகள் 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி விற்பனைக்கு வருவதற்கு முன்பு அனைத்து மாடல் புதிய கார்களும் ‘கிராஷ் டெஸ்ட்’ எனப்படும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் பாதுகாப்பான வாகன உற்பத்தியை உறுதி செய்யும் நோக்கில் விதிமுறைகளை அரசு கடுமையாக்கி வருகிறது.

Related Tags :
Next Story