தினகரன் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் ஒருவர் கைது


தினகரன் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் ஒருவர் கைது
x
தினத்தந்தி 16 Aug 2018 4:15 AM IST (Updated: 16 Aug 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

அச்சரப்பாக்கத்தில் நடந்த தினகரன் கட்சி நிர்வாகி கொலை வழ்க்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அச்சரப்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கம் காந்தி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 37). டி.டி.வி. தினகரன் ஆதரவாளரான இவர் அச்சரப்பாக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளராக இருந்தார். 

இவர் கடந்த 13–ந்தேதி 8 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய அச்சரப்பாக்கம் காந்திநகர் முதல் தெருவை சேர்ந்த மகேஷ் (24) என்பவரை அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் மற்றும் போலீசார் கைது செய்து மதுராந்தகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

மேலும் இந்த கொலையில் தொடர்புடையதாக சென்னை கோர்ட்டில் சரண் அடைந்த சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் சின்னகயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (26), அச்சரப்பாக்கம் ராவுத்தநல்லூரை சேர்ந்த ஷாஜகான் (20), ராவுத்தநல்லூர் காலனியை சேர்ந்த தீனா என்கிற தினகரன் (23), தேன்பாக்கம் கிராமத்தை சேர்ந்த இளங்கோ (20), அச்சரப்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்த இம்ரான் (20), அச்சரப்பாக்கம் அருகே உள்ள தேன்பாக்கம் அண்ணாநகரை சேர்ந்த மணிகண்டன் (26) ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

 அச்சரப்பாக்கம் வெங்கடேசபுரத்தை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story