டிக்கெட் பரிசோதனை: ஓசியில் பயணம் செய்தவர்கள் பிடிபட்டனர் ரூ.35 ஆயிரம் அபராதமாக வசூல்


டிக்கெட் பரிசோதனை: ஓசியில் பயணம் செய்தவர்கள் பிடிபட்டனர் ரூ.35 ஆயிரம் அபராதமாக வசூல்
x
தினத்தந்தி 16 Aug 2018 2:00 AM IST (Updated: 16 Aug 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்த பயணிகள் பிடிபட்டனர்.

சென்னை, 

சென்னை-கூடூர் இடையே உள்ள ரெயில் நிலையங்களில் கடந்த 10 மற்றும் 11-ந்தேதிகளில், கூடுதல் கோட்ட மேலாளர் மனோஜ் தலைமையிலான டிக்கெட் பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்த பயணிகள் பிடிபட்டனர். இதுதொடர்பாக 107 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 87 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்தவகையில் அபராதமாக ரூ.35 ஆயிரத்து 240 வசூலிக்கப்பட்டது.

மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story