கவர்னரின் தேநீர் விருந்தில் நாராயணசாமி - ரங்கசாமி சந்திப்பு, மனம்விட்டு பேசி மகிழ்ந்தனர்
சுதந்திர தினத்தையொட்டி புதுவை கவர்னர் மாளிகையில் நேற்று மாலை தேநீர் விருந்து நடந்தது.
புதுச்சேரி,
சுதந்திர தினத்தையொட்டி புதுவை கவர்னர் மாளிகையில் நேற்று மாலை தேநீர் விருந்து நடந்தது. இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் மனம் விட்டு பேசி மகிழ்ந்தனர்.
இந்த உரையாடலின்போது ரங்கசாமி அணிந்துள்ள சட்டையைப்பற்றி கேட்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி நையாண்டி செய்தார். அப்போது அவர் “நீங்கள் அணிந்துள்ள சட்டை வித்தியாசமாக உள்ளது. வட மாநிலத்தவரை போன்று இல்லாமலும், தமிழகத்தை போன்று இல்லாமலும் இருக்கிறது. இது என்ன புதுச்சேரி மாடலா?” எனக்கேட்டார். அதற்கு ரங்கசாமி பதிலளிக்கையில், “என்னைப்போன்று யாரும் சட்டை அணிய மாட்டார்கள். நான்மட்டும்தான் இதுபோன்ற சட்டை அணிவேன்” என்றார். இவ்வாறு அவர்களின் உரையாடல் தொடர்ந்தது. புதுவை அரசியலில் இருதுருவங்களாக செயல்பட்டு வரும் அவர்கள் அருகருகே அமர்ந்து உரையாடிய காட்சி ஆச்சரியப்பட வைத்தது.
நிகழ்ச்சியின்போது கவர்னர் கிரண்பெடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி மாநிலம் இயற்கை வளமிக்க மாநிலம். பிற மாநிலங்களை ஒப்பிடும்போது இங்கு பெரிய அளவில் பிரச்சினைகள் கிடையாது. புதுச்சேரியில் ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதால் குடும்பங்களில் பெண்களுக்கு பொறுப்பு அதிகமாகிவிட்டது. ஆண்கள் தங்கள் வருமானத்தை மதுவுக்கு செலவிடுகிறார்கள். பெண்களின் வருவாயில் தான் குடும்பங்கள் நடத்த வேண்டும் சூழ்நிலை உள்ளது. இந்தநிலை மாற வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சமூக மாற்றத்துக்கான தங்களின் பங்களிப்பை செலுத்த வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது கடமையை சரியாக செய்தால் புதுவை வளமானதாக உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story