பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் கிராமசபை கூட்டங்களில் அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை
பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் நேற்று நடந்த கிராம சபை கூட்டங்களில் 8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி பொது மக்கள் அதிகாரிகளை முற்று கையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பனமரத்துப்பட்டி,
பனமரத்துப்பட்டி ஒன்றி யத்துக்கு உட்பட்ட நில வாரப்பட்டி, நாழிக் கல்பட்டி, பாரப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.
இதில் நாழிக்கல்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பை சேர்ந்த பொதுமக்கள் சேலம்- சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறை வேற்ற கோரி அதிகாரிகளிடம் முறை யிட்டனர்.
அப்போது பேசிய பொது மக்கள், ‘கிராமசபை கூட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள், தாசில்தார் மற்றும் 8 வழி சாலை திட்டத்திற்காக நியமிக் கப்பட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என மனு அளித்திருந்தோம். அவர்கள் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை. அந்த அதிகாரிகள் அனைவரும் கூட்டத்திற்கு வரவேண்டும்‘ என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து, அவர்களின் கோரிக்கையான 8 வழி சாலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்பதை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டனர். ஆனால் அதிகாரிகள் உங்கள் கோரிக் கையை மனுவாக அளியுங்கள், நாங்கள் அதனை மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்கிறோம் என கூறினர். ஆனால் அதனை விவசாயிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் அங்கு நீண்டநேரம் பொது மக்கள் மற்றும் அதிகாரிகள் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அதிகாரிகள் கூட் டத்தை நடத்தாமல் பாதியில் கலைந்து சென்றனர்.
இதேபோல் நிலவாரப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், இந்த 8 வழி சாலை திட்டத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக் கப்படு கிறது என்றும், மேலும் பலர் தங்களுடைய வீடுகள், தோட் டங்களை இழப் பதாகவும், இந்த திட்டத்தால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும், எனவே அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து அதி காரிகள் இதை தீர்மானமாக நிறைவேற்ற மறுத்ததால், அங்கு பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் 8 வழி சாலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையை அதிகாரிகள் தீர்மானமாக நிறைவேற்றினர்.
இதேபோல் பாரப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் 8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் இதனை தீர்மானமாக நிறைவேற்ற மறுத்ததால் அங்கும் பொது மக்கள் மற்றும் அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்ப ட்டது. அப்போது அங் கிருந்த பொதுமக்கள், நிச்சயமாக தீர்மானம் நிறை வேற்றப்பட வேண்டும் என்றும், இல்லை யென்றால் கூட்டம் நடத்த அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியும் அதிகாரிகளை முற்று கையிட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றினர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘நிலவாரப்பட்டி ஊராட்சியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 8 வழி சாலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என தீர் மானம் புத்தகத்தில் எழுதப் பட்டது. அதேபோல் பாரப் பட்டி ஊராட்சியில் பொது மக்களின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டருக்கு பரிந்துரைத்து தீர்மானம் எழுதப்பட்டுள்ளது‘ என்றனர்.
பனமரத்துப்பட்டி ஒன்றி யத்தில் நேற்று நடந்த கிராம சபை கூட்டங்களில் 8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த குப்பனூர், குள்ளம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் சுதந்திர தினவிழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது.
குப்பனூர் ஊராட்சி மூக்கனூர் கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சபரீஸ்வரன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் பேசிய விவசாயிகள், கிராமசபை கூட்டம் நடைபெறுவதற்கு 7 நாட்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் ஏன் தெரிவிக்கவில்லை?. கிராமசபை கூட்டத்தை வேறு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும், என்றனர். மேலும் இந்த கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு மற்றும் எந்த தீர்மானமும் நிறைவேற்ற வேண்டாம், என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன் அங்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர்.
இதன்பின்னர் பொதுமக்கள், 8 வழி சாலை குப்பனூர் ஊராட்சியில் வரக்கூடாது, இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், என்று கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என்று வலியுறுத்தினார்கள். இதுதொடர்பாக பொதுமக்கள் மனுவும் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து தீர்மானத்தில், 8 வழி சாலை எதிர்ப்பு தொடர்பான மனுவை சேர்த்து மாவட்ட கலெக்டருக்கு அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
குள்ளம்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஒன்றிய அலுவலக ஊழியர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், 8 வழி சாலையினால் இந்த கிராமம் 2 ஆக பிரிகிறது. விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, என்று மனு கொடுத்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்கள். இதைத்தொடர்ந்து மனுவை ஏற்று மாநில, மத்திய அரசுகளுக்கு தெரிவிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Tags :
Next Story