குரோம்பேட்டையில் பள்ளத்தில் சிக்கிய குப்பை லாரி
அஸ்தினாபுரம் அருகே குப்பைகளை சேகரிக்க வந்த லாரியின் பின்பக்க சக்கரம், சாலையோரம் இருந்த பள்ளத்தில் சிக்கிக்கொண்டது.
தாம்பரம்,
சென்னையை அடுத்த குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியில் இருந்து செம்பாக்கம், திருமலைநகர், தாமோதரன் நகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் பொன்னியம்மன் கோவில் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.
இந்த சாலையில் பல இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்துக்கும், தனியார் தொலைபேசி நிறுவனங்களின் கேபிள்களை பதிக்கவும் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாமல் உள்ளது. நேற்று முன்தினம் இரவு விடிய விடிய செய்த மழையால் அந்த சாலை சேறும் சகதியுமாக மாறிவிட்டது.
இந்தநிலையில் நேற்று அஸ்தினாபுரம் மயானம் அருகே குப்பை தொட்டிகளில் உள்ள குப்பைகளை சேகரிக்க வந்த லாரியின் பின்பக்க சக்கரம், சாலையோரம் இருந்த பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது லாரி சாய்ந்து இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். அதிர்ஷ்டவசமாக அது தவிர்க்கப்பட்டது.
Related Tags :
Next Story