சுதந்திர தின சிறப்பு வழிபாடு: தமிழக கோவில்களில் பொது விருந்து முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பங்கேற்பு


சுதந்திர தின சிறப்பு வழிபாடு: தமிழக கோவில்களில் பொது விருந்து முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பங்கேற்பு
x
தினத்தந்தி 16 Aug 2018 4:15 AM IST (Updated: 16 Aug 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள 449 கோவில்களில் பொது விருந்து நடந்தது.

சென்னை, 

தமிழகத்தில் நிதி வசதியுடைய கோவில்களில் சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் சுதந்திர தினத்தையொட்டி நேற்று, தமிழகத்தில் உள்ள 449 கோவில்களில் பொது விருந்து நடந்தது.

சென்னை கே.கே.நகர் சக்தி விநாயகர் கோவிலில் நடந்த பொதுவிருந்தில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொண்டனர். இதனைத்தவிர சென்னையில் சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்ட கோவில் பொது விருந்து விவரம் வருமாறு:-

தியாகராஜசுவாமி கோவில் - சபாநாயகர் தனபால், பார்த்தசாரதி கோவில் - திண்டுக்கல் சீனிவாசன், அனந்தபத்மநாப சுவாமி கோவில் - செங்கோட்டையன், முண்டகக்கண்ணி அம்மன் கோவில் - செல்லூர் ராஜூ, காளிகாம்பாள் கோவில் - பி.தங்கமணி, கபாலீசுவரர் கோவில் - எஸ்.பி.வேலுமணி, சித்திபுத்தி விநாயகர் கோவில் - டி.ஜெயக்குமார், பாம்பன் சுவாமி கோவில் - சி.வி.சண்முகம், ஏகாம்பரேசுவரர் கோவில் - கே.பி.அன்பழகன், தண்டீசுவரர் கோவில் - வி.சரோஜா, மாதவப்பெருமாள் கோவில் - எம்.சி.சம்பத், சவுமிய தாமோதரப்பெருமாள் கோவில் - கே.சி.கருப்பண்ணன், பாலசுப்ரமணிய சுவாமி கோவில் - ஆர்.காமராஜ், மகாலட்சுமி கோவில் - ஓ.எஸ்.மணியன், பாதாள பொன்னியம்மன் கோவில் - உடுமலை ராதாகிருஷ்ணன், கந்தகோட்டம் - சி.விஜயபாஸ்கர், ஆதிகேசவ பெருமாள் கோவில் - ஆர்.துரைக்கண்ணு, கச்சாலீசுவரர் கோவில் - கடம்பூர் ராஜூ, வடபழனி முருகன் கோவில் - ஆர்.பி.உதயகுமார், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் - வெல்லமண்டி நடராஜன், சென்ன மல்லீசுவரர் கோவில் - கே.சி.வீரமணி, குறுங்காலீசுவரர் கோவில் - எம்.ஆர்.விஜயபாஸ்கர், கருமாரியம்மன் கோவில் - கே.டி.ராஜேந்திர பாலாஜி, செல்வ விநாயகர் கோவில் - பெஞ்சமின், அறுபடை முருகன் கோவில் - எம்.மணிகண்டன், காரணீசுவரர் கோவில் - ராஜலட்சுமி, திருவல்லீசுவரர் கோவில் - பாண்டியராஜன், கங்காதீசுவரர் கோவில்- பாஸ்கரன், காமாட்சி அம்மன் கோவில் - சேவூர் ராமச்சந்திரன், அருணாசலேசுவரர் கோவில் - வளர்மதி, ஏகாம்பரேசுவரர் கோவில் - பாலகிருஷ்ணா ரெட்டி, பரசுராம லிங்கேசுவரர் கோவில் - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், திருவட்டீசுவரர் கோவில் - அரசு கொறடா ராஜேந்திரன்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

Next Story