குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை எதிர்த்து மனித சங்கிலி
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை எதிர்த்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை,
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை எதிர்த்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் இருந்து கீழ ராஜவீதி வரை கைகோர்த்து நின்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் சலோமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் துரை.நாராயணன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் விக்கி ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கவிவர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story