பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மனித சங்கிலி
பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து மனித சங்கிலி இயக்கம் புதிய பஸ்நிலைய பகுதியில் நேற்று மாலை நடந்தது.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து மனித சங்கிலி இயக்கம் புதிய பஸ்நிலைய பகுதியில் நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை தலைமை தாங்கினார். இதில் சிறிது தூரம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைகளை கோர்த்து மனித சங்கிலியாக நின்றனர். அப்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story