குந்தா அணையில் இருந்து கெத்தை அணைக்கு தண்ணீர் செல்லும் ராட்சத குழாயில் அடைப்பு மின் உற்பத்தி பாதிப்பு
குந்தா அணையில் இருந்து கெத்தை அணைக்கு தண்ணீர் செல்லும் ராட்சத குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பரளி உள்பட 12 அணைகளில் நீர் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன் மூலம் தினமும் 834 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. அவலாஞ்சி அணையில் நீர் மின் உற்பத்தி செய்த பிறகு, அங்கிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் எமரால்டு அணையில் தேக்கப்படுகிறது. இவ்வாறாக எமரால்டு அணையில் இருந்து குந்தா அணைக்கும், குந்தா அணையில் இருந்து கெத்தை அணைக்கும், கெத்தை அணையில் இருந்து பரளி அணைக்கும், பரளி அணையில் இருந்து பில்லூர் அணைக்கும் மின் உற்பத்திக்கு பிறகு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்கு பிறகு திறந்து விடப்படும் தண்ணீர் பவானி ஆறாக ஓடி பாசன வசதிக்கு பயன்படுகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின. இதையடுத்து அனைத்து அணைகளில் இருந்தும் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் அவலாஞ்சி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீருடன் செடி, கொடி, மரங்கள் மற்றும் கற்களும் குந்தா அணைக்கு அடித்து வரப்பட்டன. ஏற்கனவே குந்தா அணையில் 70 சதவீதம் சேறும், சகதியும் நிறைந்துள்ளது.
இதனால் அடிக்கடி மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது சேறும், சகதியும் மேலும் அதிகரித்து உள்ளது. இதையடுத்து குந்தா அணையில் இருந்து ராட்சத குழாய் மூலம் கெத்தை அணைக்கு தண்ணீர் செல்கிறது. ஆனால் குந்தா அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீருடன் செடி, கொடி, மரங்கள் மற்றும் கற்களும் அடித்து வரப்பட்டதால் அந்த குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கெத்தை அணையில் 3-வது நாளாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த அடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
முன்னதாக அவலாஞ்சி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டது. இதையடுத்து குந்தா அணையில் இருந்து கெத்தை அணைக்கு செல்லும் ராட்சத குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்யும் பணியில் பொறியாளர் பாலாஜி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது பலத்த மழை பெய்ததால், பணிகளில் தொய்வு ஏற்பட்டது. மழை குறைந்ததும் அந்த பணிகள் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணிகள் நிறைவு பெற்றதும் அவலாஞ்சி அணையில் இருந்து வழக்கம்போல் தண்ணீர் திறந்துவிடப்பட்டு, கெத்தையில் மின் உற்பத்தி செய்யப்படும் என்று மின்வாரிய உதவி பொறியாளர் ஹால்துரை தெரிவித்தார்.

Related Tags :
Next Story