பசு மாடு இறந்ததால் கால்நடை மருத்துவமனை முன் திடீர் போராட்டம்


பசு மாடு இறந்ததால் கால்நடை மருத்துவமனை முன் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2018 3:00 AM IST (Updated: 17 Aug 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

திரு-பட்டினம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பசு மாடு இறந்தது. டாக்டர்கள் வராததால் சிகிச்சை கிடைக்காமல் மாடு இறந்ததாக புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டம் திரு-பட்டினம் அல்லிகுளம் வீதியை சேர்ந்த திருமுருகன் என்பவர் தனது பசு மாட்டை அந்த பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அப்போது அங்கு மருத்துவர்கள், ஊழியர்கள் இல்லாததால் பசுவுக்கு சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் மீண்டும் அதை திருமுருகன் வீட்டுக்கு கொண்டு சென்றார். தொடர்ந்து 6 நாட்கள் கால்நடை மருத்துவமனைக்கு வந்தபோதிலும் மருத்துவர்கள் இல்லாததால் பசு மாட்டுக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் போனதாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை அந்த பசு மாடு இறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த திருமுருகன், அவரது உறவினர்கள் மாட்டின் உடல், அதன் கன்று குட்டியுடன் திரு-பட்டினம் அரசு கால்நடை மருத்துவமனை முன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இறந்த மாட்டிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மருத்துவமனையில் கால்நடை மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். தேவையான மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும் என்று கூறி கண்டன கோஷங் கள் எழுப்பினார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்து திரு-பட்டினம் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதன்பின் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story