பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபின்பு தான் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது இல.கணேசன் எம்.பி. பேட்டி
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபின்பு தான் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று மயிலாடுதுறையில் இல.கணேசன் எம்.பி. கூறினார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை விளக்கி தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. மயிலாடுதுறை வள்ளலார் கோவில் எதிரில் பிரசாரத்தை கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்.பி. தொடங்கி வைத்து பேசினார். பிரசாரத்தின் போது கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் வெங்கடேசன், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கோ.வி.சேதுராமன், மாவட்ட பொதுச் செயலாளர் நாஞ்சில் பாலு, நகர தலைவர் மோடி கண்ணன், ஒன்றிய தலைவர் சோமசுந்தரம், சங்கரன், விசுவ இந்து பரிஷத் மாநில துணை தலைவர் வாஞ்சிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து இல.கணேசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறிய தாவது:-
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபின்பு தான் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முதலீடு செய்ய தகுதியுடைய நாடுகளின் பட்டியலில் 146-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 100-வது இடத்துக்கு வந்துள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் முதல் 10 இடங்களுக்குள் வந்துவிடும். மோடி ஆட்சியில் லஞ்ச லாவண்யங்கள் குறைந்துள்ளன. ப.சிதம்பரம் போன்றோர் மீது கூட ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே ப.சிதம்பரம் போன்ற பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து இந்த ஆட்சி குறித்த பாராட்டுக்களை எதிர்பார்க்க முடியாது.
ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்படும் போது சில மாநிலங்கள் அமல்படுத்த மறுப்பு தெரிவித்தனர். அதனால் டாஸ்மாக், பெட்ரோலிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து பெட்ரோல், டீசல் விலை விரைவில் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் கொண்டு வரப்படும். ஒருவரின் மரணத்திற்கு பிறகு அவரைப்பற்றிய நல்ல விஷயங்களை மட்டுமே பேச வேண்டும் என்பது நாம் நாடு தொன்றுதொட்டு கடைபிடிக்கும் மரபு. துரதிஷ்டவசமாக சம்பந்தப்பட்ட கட்சியினரே பிரச்சினையை உருவாக்கும் விதமாக பேசுகிறார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மரணம் தமிழகத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கட்சிகளுக்கு இடையே இருக்கிற காழ்ப்புணர்ச்சியை போக்கும் என்று நினைத்திருந்தோம். ஆனால் தி.மு.க.- அ.தி.மு.க. கட்சிகளுக்கு இடையே கடுமையான போக்கு நிலவியுள்ளது. கர்நாடகத்தில் ஆண்டவனின் கருணையால் பெய்து வரும் மழையால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு வருவது ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், கணிசமான தண்ணீர் கடலில் கலப்பது வேதனை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story