கோவில்பட்டியில் மினி மாரத்தான் போட்டி


கோவில்பட்டியில் மினி மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 17 Aug 2018 3:15 AM IST (Updated: 17 Aug 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கோவில்பட்டி, 


சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டியில் மத்திய நகர் அரிமா சங்கம் சார்பில், 12 கிலோ மீட்டர் தூர மினி மாரத்தான் போட்டி நேற்று காலையில் நடந்தது. கோவில்பட்டி-மந்திதோப்பு ரோடு ஜெயபிரகாஷ் அரங்கம் முன்பிருந்து தொடங்கி, ஊத்துப்பட்டி வரையிலும் சென்று, திரும்பி வரும் வகையில் பந்தய தூரம் அமைக்கப்பட்டு இருந்தது.

சங்க முன்னாள் ஆளுநர் சீனிவாசகம் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் 74 பேர் கலந்து கொண்டனர். பந்தய தூரத்தை 52 நிமிடங்களில் கடந்த சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மாணவர் கஜேந்திர கோகுல் முதலிடம் பிடித்தார். காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தர்மா (53 நிமிடம்), ஆன்ட்ரூஸ் (54 நிமிடம்), முகேஷ் (55 நிமிடம்), விஜய் (56 நிமிடம்) ஆகியோர் அடுத்தடுத்து பந்தய தூரத்தை கடந்தனர்.

பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000, 2-வது பரிசாக ரூ.2,000, 3, 4, 5-வது பரிசாக தலா ரூ.1,000 வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சங்க தலைவர் ராஜ்குமார், செயலாளர் பிரேம்குமார், பொருளாளர் சரவணகுமார், முன்னாள் தலைவர் பிரபாகர், என்ஜினீயர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story