கூட்டுறவுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
கூட்டுறவுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பழனிசாமி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் வைரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு 1,162 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்கள். இதில் ஆறுமுகம் எம்.எல்.ஏ., கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் மிருணாளினி, மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் அனைத்து ரேசன் கடைகளிலும் பொருட்கள் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. பொருட்கள் ஏதாவது வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இலவசமாக பொதுமக்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கருணாநிதி இல்லாத தி.மு.க. பூஜ்யம் தான். கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே அவர்களால் 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியவில்லை. இனி கனவில் கூட தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வர முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story