பொன்னேரி ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகை


பொன்னேரி ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 17 Aug 2018 4:30 AM IST (Updated: 17 Aug 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

பொன்னேரி,

பொன்னேரியை அடுத்த மெதூர் ஊராட்சியில் அடங்கியது விடதண்டலம் கிராமம். இங்குள்ள விவசாயிகள் ஏரியில் நெல் பயிரிட்டுள்ளனர். இந்த நெல் பயிர் இன்னும் 15 நாட்களில் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் விடதண்டலம் ஏரியை ஆக்கிரமித்து 40 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டு இருந்ததை குடிமராமத்து பணியின்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி அறிந்தார். இதனை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி பொன்னேரி வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு பிரிவு அதிகாரிகள் விடதண்டலம் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகை

இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்னர் பொன்னேரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் நெல் பயிரை வைத்திருந்தனர். அப்போது ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்களை அறுவடை செய்ய 15 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும். அறுவடைக்கு பின்னர் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ள தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story