மனைவியை கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு


மனைவியை கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 17 Aug 2018 2:30 AM IST (Updated: 17 Aug 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

மனைவியை கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

செங்கல்பட்டு,

சென்னையை அடுத்த பழைய பெருங்களத்தூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 35). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் சென்னை முடிச்சூர் பாலாஜி நகரை சேர்ந்த டில்லிராஜ் என்பவரது மகள் ஷீலாபத்மினி என்பவருக்கும் கடந்த 6-2-2009 அன்று திருமணம் நடந்தது. வினோத்குமார் வேலைக்கு செல்லாமல் தினந்தோறும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவார். இதனால் ஷீலாபத்மினியின் தந்தை டில்லிராஜ் தனது வீட்டின் அருகிலேயே வினோத்குமாருக்கு வாடகைக்கு வீடு பார்த்து வைத்தார்.

கடந்த 20-3-2010 அன்று இரவு வினோத்குமாருக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. வழக்கமான தகராறு என்று டில்லிராஜ் வீட்டிலேயே இருந்துவிட்டார்.

கொலை

டில்லிராஜ் தினந்தோறும் அதிகாலையில் நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம். அதே போல் 21-3-2010 அன்று அதிகாலை 4½ மணிக்கு நடைபயிற்சிக்கு சென்ற டில்லிராஜ் மகளின் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த வினோத்குமார், டில்லிராஜை தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். உள்ளே சென்று பார்த்தபோது மகள் ஷீலாபத்மினியின் கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து டில்லிராஜ் பீர்க்கன்காரணை போலீசில் புகார் செய்தார். போலீசார் வினோத்குமாரை கைது செய்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழககை விசாரித்த நீதிபதி, மனைவியை கொன்ற வழக்கில் வினோத்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Next Story