10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய காதலன்


10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய காதலன்
x
தினத்தந்தி 17 Aug 2018 3:15 AM IST (Updated: 17 Aug 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியை காதலன் கர்ப்பமாக்கினார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்கோவிலூர், 



திருக்கோவிலூர் அருகே உள்ள தேவபாண்டலத்தை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் அஜித் என்கிற கோவிந்தராஜ் (வயது 20). இவரும், பக்கத்து ஊரை சேர்ந்த ஒருவரும் நண்பர்கள். எனவே நண்பரை பார்ப்பதற்காக கோவிந்தராஜ், அடிக்கடி அந்த கிராமத்துக்கு சென்று வந்தார். அப்போது கோவிந்தராஜிக்கும், அந்த ஊரை சேர்ந்த 15 வயது மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவி அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறாள். இருவரும் முதலில் நண்பர்களாக பழகினார்கள். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். அவ்வாறு சந்திக்கும்போதெல்லாம் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதனால் அந்த மாணவி கர்ப்பமானாள்.

இருப்பினும் அந்த மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு சென்று வந்தாள். நாளடைவில் அந்த மாணவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இது பற்றி அறிந்ததும் அந்த மாணவியிடம், அவரது தாய் கேட்டார். அப்போதுதான் அந்த மாணவி, தான் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தாள். இதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மாணவியை சோதனை செய்தனர். அதில் அந்த மாணவி, 8 மாத கர்ப்பிணி என்று தெரிந்தது.

இதற்கிடையில் இது பற்றி அறிந்ததும் கோவிந்தராஜ் தலைமறைவாகி விட்டார். இந்த சம்பவம் குறித்து மாணவியின் தாய், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கோவிந்தராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story